யாழ். பல்கலை மகுடம் சூடியது!
Saturday, October 27th, 2018
யாழ்ப்பாணம் ஹொக்கிச் சங்கம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்திய ஹொக்கித் தொடரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி கிண்ணம் வென்றது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற இறுதியாட்டத்தில் ஓல்ட் கோல்ட்ஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி மோதியது.
நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பதிவு செய்தமையால் சமநிலைத் தவிர்ப்பின் மூலம் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முடிவில் 3:1 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.
Related posts:
இலங்கை - இந்திய டெஸ்ட் : வலுவான நிலையில் இந்தியா!
அனித்தாவின் சாதனையினை முறியடித்த சச்சினி!
அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் - புள்ளிகளும் குறைப்பு!
|
|
|


