திருப்தி அடைய கூடாது கோக்லி – சச்சின் !

Saturday, August 11th, 2018

இந்திய அணியின் தலைவர் கோக்லி தனது தனிப்பட்ட பெறுபேறு குறித்து ஒருபோதும் திருப்தி அடைய கூடாது என்று தெரிவித்தார் முன்னாள் ஜாம்பவான் சச்சின்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோக்லி தனது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது. எந்த மாதிரியான விமர்சனங்கள் எழுகிறது என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் என்ன சாதிக்க வேண்டுமென்று விரும்புகிறாரோ அதன் மீது மட்டுமே தொடர்ந்து கவனம் இருக்க வேண்டும். இதயம் அதை நோக்கி உங்களை வழி நடத்தட்டும்.

எனது சொந்த அனுபவத்தை வைத்துச் சொல்கின்றேன். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எவ்வளவு ஓட்டங்கள் குவித்தாலும் போதாது. நுpறைய ஓட்டங்களைச் சேர்க்கும் வேட்கையுடன் கோக்லி ஆடுகிறார். இருப்பினும் அவர் எவ்வளவு ஓட்டங்கள் குவித்தாலும் அது அவருக்குப் போதுமானதாக இருக்காது. மனநிறைவு ஏற்படும்போது அதன் பிறகு சரிவு தொடங்கிவிடும். எனவே ஒரு வீரராக ஒருபோதும் கோக்லி திருப்திப்பட்டு விடக்கூடாது. பந்துவீச்சாளர்களால் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடியும். ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் அப்படி இல்லை. களம் இறங்கி எத்தனை ஓட்டங்கள் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொண்டே இருக்கமுடியும். எனவே திருப்தி அடைந்து விடாதீர்கள். மகிழ்ச்சியுடன் இருங்கள் என்று சச்சின் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: