பங்களாதேஸ் பந்துவிச்சாளர்களான தஸ்கின், சணியின் தடை நீங்கியது!

Saturday, September 24th, 2016

பங்களாதேஷின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமட், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அரபாத் சணி ஆகியோரின் திருத்தப்பட்ட பந்துவீச்சுப்பாணிகள் விதிமுறைகளுக்குட்பட்டவை என சர்வதேச கிரிக்கெட் சபை கண்டுபிடிக்கப்பட்டமையைத் தொடர்ந்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருவரும் பந்துவீச அனுமதிக்கப்பட்டுள்ளது.

இருவரினதும் பந்துவீச்சுப்பாணிகளும், அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேர்ணிலுள்ள தேசிய கிரிக்கெட் நிலையத்தில், கடந்த எட்டாம் திகதி மீளச் சோதிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களின் அனைத்து பந்துவீச்சுகளுக்கான முழங்கை விரிவுகள், சர்வதேச கிரிக்கெட் சபையின் உயர்ந்தபட்ச எல்லையான 15 பாகைக்குள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரபாத், தஸ்கின் ஆகியோர், சந்தேகத்துக்கிடமான பந்துவீச்சுப்பாணியை பயன்படுத்துவதாக எதிர்காலத்தில் நடுவர்கள் சந்தேகப்பட்டால், முறைப்பாடு செய்யலாம் என சர்வதேச கிரிக்கெட் சபையின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரில், மார்ச் ஒன்பதாம் திகதி இடம்பெற்ற பங்களாதேஷின் முதலாவது போட்டியைத் தொடர்ந்து, சணி, தஸ்கின் ஆகியோரின் பந்துவீச்சுப்பாணி குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் சபையால் அனுமதிக்கப்பட்ட சென்னை நிலையத்தில் இருவரும் சோதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருவரினதும் பந்துவீச்சுப்பாணிகள், விதிமுறைகளுக்கு புறம்பானவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

article_1474687128-Insb32r8m6

Related posts: