மோசடியில் வீரர்களுக்கும் தொடர்பா?

இலங்கை கிரிக்கெட் சபையில் மில்லியன் டொலர்கள் ஊழல் நடைபெற்றுள்ளதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த ஊழல்கள் தொடர்பான தகவல்களை எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் வெளியிடவுள்ளதாக இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
“இலங்கை கிரிக்கெட் சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊழல்கள், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியை விட பல மடங்காகும். மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது இலங்கை ரூபாயில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இலங்கை கிரிக்கெட் சபையில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொல்களில் மோசடி செய்யப்பட்டள்ளது. இந்த மோசடிகள் ஆட்ட நிர்ணயம் மற்றும் தொலைக்காட்சி உரிமங்களை வழங்குவதில் இடம்பெற்றுள்ளது.
மோசடி குறித்த தகவல்களை சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முக்கிய சிலர் வழங்கினர். இந்த மோசடியை பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பிலான அனைத்து ஆதரங்களும் என்னிடம் உள்ளது. அனைத்தையும் வெளிப்படுத்துவேன். குறித்த ஊழல மோசடி சம்பவங்களில் முக்கிய உறுப்பினர்களும், கற்பனையிலும் நாம் நினைக்காத சிலரும் இணைந்துள்ளனர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வீரர்களுக்கும் இதில் சம்பந்தம் உள்ளதா, யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என பாரிய கேள்வி இரசிகர்கள் மத்தியின், ஆரூடங்களாக உலாவுகின்றது.
Related posts:
|
|