லேவர் கோப்பை டென்னிஸ் தொடர்: எதிர்வரும் செப்டம்பர் மாதம்ஆரம்பம்!

Friday, February 24th, 2017

அவுஸ்ரேலிய டென்னிஸ் ஜாம்பவான் ரொட்லேவரின் நினைவாக நடத்தப்படும், முதலாவது லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி செக்குடியரசின் தலைநகரான பிராக்கில், எதிர்வரும் செப்டம்பர் மாதம்  22ஆம் திகதி முதல்  24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் ஐரோப்பிய அணி, உலக அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய அணிக்கு சுவீடனின் முன்னாள் வீரர் பிஜோர்ன் போர்க்கும், உலக அணிக்கு அமெரிக்காவின் ஜோன் மெக்என்ரோவும் அணித்தலைவராக செயல்படவுள்ளனர்.

இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 9 போட்டிகளும், இரட்டையர் பிரிவில் 3 போட்டிகளும் நடைபெறவுள்ளது. ஒரு நாளைக்கு 4 போட்டிகள் நடத்தப்படும். இதில் 3 ஒற்றையர் பிரிவு போட்டிகளும், ஒரு இரட்டையர் பிரிவுபோட்டியும் அடங்கும். ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் இடம்பெறுவார்கள். விம்பிள்டன் போட்டிக்கு பிறகு வெளியிடப்படும் ஏ.டி.பி தரவரிசைபட்டியலின் அடிப்படையில் 4 வீரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். மீதம்உள்ள இரு வீரர்களை அந்த அணியின் தலைவர்கள் தேர்வு செய்யவுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ஆண்டை மட்டும் தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் இந்தபோட்டி நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. காலண்டர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றகடைசி வீரர் ரொட்லேவர் தான். காலண்டர் கிராண்ட்ஸ்லாம் என்பது ஒரே ஆண்டில் நடத்தப்படும் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வெல்வதாகும். இந்த சாதனையை ரொட்லேவர் கடந்த 1969ஆம் ஆண்டு நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Part-DV-DV2218879-1-1-0

Related posts: