மைக்கல் லம்ப் ஓய்வு!
 Friday, July 21st, 2017
        
                    Friday, July 21st, 2017
            இங்கிலாந்து அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரரான மைக்கல் லம்ப், சர்வதேச கிரிக்கட் அரங்கிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்
இங்கிலாந்தின் பிராந்திய அணியான நோட்டிங்காம்சியர் அணிக்காக விளையாடிய மைக்கல் லம்ப், போட்டியின் போது தீவிர காயமடைந்ததையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த ஓய்வு முடிவினை அவர் எடுத்துள்ளார்
இதுவரை அணிக்காக 27 இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்
ஒருநாள் அறிமுக போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என பெருமையும் இவரையே சாரும்.2014ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஹென்டிகுஹாவில் இடம்பெற்ற அறிமுக போட்டியிலேயே இவர் சதத்தினை பெற்றிருந்தார்.மேலும், இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தை இலங்கிலாந்து 2010ம் ஆண்டு கைப்பற்றும் போது இவர் அணியில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        