மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடர் வரை அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார்?

Monday, June 12th, 2017

இந்தியக் கிரிக்கெட் அணி தனது புதிய தலைமை பயிற்சியாளரை தெரிவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடர் வரை தற்போதைய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே நீடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 26ஆம் நடைபெறும் இந்தியக் கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியக் கிரிக்கெட் அணி, ஜூன் 20ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு ரி-ருவென்ரி போட்டியில் விளையாடவுள்ளது.

இதன் முதல் ஒருநாள் போட்டி ஜூன் 23ஆம் திகதி, டிரினிடாட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விரேந்திர சேவாக், அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டொம் மூடி உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: