மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி!

Thursday, August 2nd, 2018

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக் வொர்த் லீவிஸ்’ முறையில் வென்றது.

இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை பெற்றது. மேற்கிந்தீயத் தீவுகளில் ஒன்றான செயின்ட் கிட்ஸ், நெவிலிஸ் தீவில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸின்போது மழையால் ஆட்டம் தாமதமானது.

இதையடுத்து, டக் வொர்த் லீவிஸ் முறையில் அந்த அணி 11 ஓவர்களில் 91 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி மேற்கிந்தியத் தீவுகள் 9.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து வென்றது. முன்னதாக, டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீசத் தீர்மானித்தது. பேட் செய்த வங்கதேசத்தில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 35 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகளில் ஆன்ட்ரு ரஸ்னஸல் அதிகபட்சமாக 35, அவரோடு ரோவ்மென் பாவெல் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வங்கதேசத்தின் முஸ்டாஃபிஸுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

Related posts: