மேன்முறையீடு செய்த தனுஸ்க குணதிலக்க!
Saturday, October 7th, 2017
ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனுஸ்க குணதிலக்க இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
அண்மையில் இடமபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விதியை மீறி நடந்து கொண்டமை தொடர்பில் தனுஸ்க குணதிலக்விற்கு 6 ஒருநாள் போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வருடாந்த சம்பளத்தில் 20 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அணியில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொள்ளல், போட்டிகளுக்கு இடைநடுவே விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல், மதுபானம் அருந்துதல், போட்டிகளுக்காக உரிய நேரத்தில் சமூகமளிக்காமை, உடற் தகுதி சோதனையில் கலந்து கொள்ளாமை போன்ற குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாற்றுத் திறனாளர்களுக்கு தடை: ரய்ஷியா கடும் கண்டனம்!
சென்னை அணியின் பயிற்சியாளர் மெட்டாரஸி விலகல்!
மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி!
|
|
|


