மூன்றாவது இரட்டைச்சதம் அடித்த முஷ்பிகுர்!

ஸிம்பாப்வேயிற்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீம் அபார இரட்டைச்சதத்தை விளாசியுள்ளார்.
டாக்காவில் நடைபெறும் ஒற்றை டெஸ்ட் போட்டியில் ஸிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 265 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் சார்பாக அணித்தலைவர் மொமினுல் ஹக் சதமடித்தார்.
அபாரமாக விளையாடிய முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் அரங்கில் மூன்றாவது இரட்டைச்சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 560 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்தியது.
போட்டியில் பங்களாதேஷ் 286 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
Related posts:
உலகை உருகச் செய்த அழுகை!
கிரிக்கட்டின் புதிய யாப்பில் சேர்க்கப்படவுள்ள யோசனைகள்!
காலிமுகத்திடலில் நடைபெறும் வாகனத்தை தன் தலைமுடியால் இழுக்கும் 60 வயது திருச்செல்வத்தின் உலக சாதனை நி...
|
|