முரளிதரனுக்கு பிறகு யாரும் வீழ்த்தவில்லையே – ஜெயசூர்யா கவலை!

Friday, December 2nd, 2016

இலங்கை அணியில் முத்தையா முரளிதரனுக்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் 20 விக்கெட்டுகள் வீழ்த்தவில்லையே என ஜெயசூர்யா கூறியுள்ளார்.

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரும் முன்னாள் வீரருமான ஜெயசூர்யா, இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இலங்கை அணியில் ஜெயவர்த்தனே, சங்ககாரா, திலகரத்னே தில்சன் போன்றோர் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு, அவர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னும் போதுமான வீரர்கள் கிடைக்கவில்லை என்றும் அதற்கு காரணம் அவர்கள் 15 முதல் 16 வருடங்கள் இலங்கை அணியில் இருந்தனர் என கூறியுள்ளார்.

மேலும் தற்போது இலங்கை அணியில் மூத்த வீரராக ரங்கனா ஹெராத்(38) உள்ளார். இவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் இலங்கை அணியில் நீடிக்க வேண்டும் என்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் கிடைப்பது மிகவும் அரிது, ரங்கனா ஹெராத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

முரளிதரன் ஓய்வு பெற்ற பின்பு எந்த ஒரு சுழற்பந்து வீச்சாளர்களும் 20 விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை எனவும் கூறியுள்ளார்.

11-1434026659-sanath-jayasuriya--11600

Related posts: