கௌதமன் – மதுசன் அசத்தல்: காலிறுதியில் யாழ்.மத்திய கல்லூரி!

Saturday, March 24th, 2018

சிறிஸ்கந்தராசா கௌதமனின் அரைச்சதம் செல்வராசா மதுசனின் அபாரமான பந்து வீச்சு ஆகியன கை கொடுக்க பிரிவு 3 போட்டிகளின் அரையிறுதிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நுழைந்தது.

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கைப் பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு ௲ 3 அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இதன் போட்டி ஒன்று 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து ஜாஎல கிறிஸ்து அரசர் கல்லூரி அணி மோதியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிறிஸ்து அரசர் கல்லூரி அணி 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மலித் நகஞ்சன் 71, நிசால் மலிங்க 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் யாழ்ப்பாணம் கல்லூரி சார்பாக செல்வராசா மதுசன் 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் கமலராசா இயலரசன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் சூரியகுமார் சுயன் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 34.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் கௌதமன் ஆட்டம் இழக்காமல் 50, இயலரசன் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் கிறிஸ்து அரசர் கல்லூரி அணி சார்பாக தெமிந்த கொலம்ப கமகே 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Related posts: