முதல் இடத்தை பிடிக்க மும்முனைப் போட்டி !

Wednesday, August 10th, 2016

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா 118 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 108 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. தற்போது இந்த நான்கு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தபின் டெஸ்ட் தர வரிசை வெளியிடப்படும்.

இதில் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா அவ்விடத்தை தக்கவைக்க தீவிர முயற்சி மேற்கொள்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான், இலங்கிலாந்து, இந்தியா அந்த பதவியை பறிக்க முயற்சி செய்கிறது.

எது நடக்கிறது என்று டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர்தான் தெரிய வரும்.
அவுஸ்திரேலியா முதல் இடத்தில் நீடிக்க வேண்டுமென்றால் கொழும்பில் நடைபெற இருக்கும் 3-வது டெஸ்டில் இலங்கை அணியை கட்டாயம் வீழ்த்தியே ஆக வேண்டும். அதே சமயத்தில் இங்கிலாந்து ஓவலில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்டில் பாகிஸ்தானை வென்றால், அல்லது இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரை 3-0 என வென்றால், அவுஸ்திரேலியா பாடு திண்டாட்டம்தான். அதே சமயத்தில் ஓவல் டெஸ்ட் டிரா ஆகி, இந்தியா 3-0 என தொடரை வெல்லாவிடில் அவுஸ்திரேலியா 1-வது இடத்தில் நிலைத்து நிற்க வாய்ப்புள்ளது.

இந்தியா முதல் இடத்திற்கு முன்னேற வேண்டுமென்றால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக உள்ள இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டும். மற்ற எதையும் பார்க்க தேவையில்லை.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-1 என கைப்பற்றி, இந்தியா மேற்கிந்திய தீவுகள் தொடரை 3-0 என வெல்லாவிடில் இங்கிலாந்து தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும். கொழும்பு டெஸ்டில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்து, இந்தியா இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால், ஓவல் டெஸ்ட் டிராவில் முடிந்தாலும் இங்கிலாந்து முதலிடத்தை எட்டும். பாகிஸ்தான் ஓவல் டெஸ்டில் வெற்றி பெற்று, இந்தியா 3-0 என மேற்கிந்திய தீவுகள் தொடரை கைப்பற்றாமல், அவுஸ்திரேலியா கொழும்பு டெஸ்டில் தோற்றால் முதல் இடம் பிடிக்கும்.

Related posts: