முதலிடத்தைப் பிடிக்கும் ஜேர்மனி!

Friday, September 15th, 2017

உலக காற்பந்தாட்ட சம்மேளனம் FIFA  நேற்று வெளியிட்ட , தரப்படுத்தல் பட்டியலில் , ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளது . செக் குடியரசுக்கு எதிராகவும் , நோர்வேக்கு எதிராகவும் , இந்த மாதம்  விளையாடி வென்ற காரணத்தால் , அதற்கு முன்னணி வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது .

லயனல் மெஸ்ஸியின்  ஆர்ஜெண்டீனா , நான்காம் இடத்துக்கு இறங்கி உள்ளது. ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி , மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. பிரித்தானியாவின் சிறந்த அணியாகி உள்ள  வேல்ஸ் ,இங்கிலாந்தை 15ம் இடத்துக்கு தள்ளி விட்டு , 13ம் இடத்துக்கு தாவி இருக்கின்றது.

முதல் பத்து இடத்திலுள்ள அணிகளின் பட்டியல் இதோ :

ஜேர்மனி , பிரேசில் , போர்த்துக்கல் , ஆர்ஜெண்டீனா , பெல்ஜியம் , போலந்து , சுவிற்சர்லாந்து , பிரான்ஸ் , சிலி , கொலம்பியா

Related posts: