244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலியா!

Saturday, November 5th, 2016

பிலாண்டரின் சிறப்பான பந்து வீச்சால் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 244 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், மார்சும் சிறப்பான துவக்கத்தை தந்தனர். இதனால் அந்த அணி ஒரு கட்டத்தில் 158 ஓட்டங்களுக்கு விக்கெட் ஏதும் இழக்காமல் வலுவான நிலையில் இருந்தது.

இதனால் அவுஸ்திரேலியா அணி 400 முதல் 500 ஓட்டங்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையை காண்பிக்க ஆரம்பித்தனர். அது போலவே வார்னர்(97), மார்ஷ்(63) என வெளியேற அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிலர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் 158 ஓட்டங்களுக்கு விக்கெட் ஏதும் இழக்காமல் இருந்த அவுஸ்திரேலியா அணி அடுத்த 86 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா அணித் தரப்பில் பிலாண்டர் 4 விக்கெட்டுகளும், மகராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதைத் தொடர்ந்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆபிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிறகு 104 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.இன்னும் மூன்று நாட்கள் மீதம் உள்ள நிலையில் தென் ஆபிரிக்க அணி அதிக ஓட்டங்கள் குவித்து அவுஸ்திரேலியா அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: