கிண்ணத்தை வென்றது ஓல்கோல்ட்ஸ்!  

Friday, August 5th, 2016

சுன்னாகம் கிழக்கு அம்பாள் விளையாட்டுக் கழகம் நடத்திய வருடாந்த விளையாட்டு விழாவின் ஹொக்கிச் சுற்றுப்போட்டியில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி கிண்ணத்தை வென்றது.

10 அணிகள் பங்குபற்றியதான குறித்த சுற்றுப்போட்டி தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற போது, ஓல்ட் கோல்ட்ஸ் அணியை எதிர்த்து தெல்லிப்பழை யூனியன் அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் யூனியன் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. எனினும், இரண்டாவது பாதியில் ஆட்டந் தொடங்கிய சில நிமிடங்களில் யூனியன் அணி மேலும் ஒரு கோலைப் போட்டு, தம்மைப் பலப்படுத்திக் கொண்டது.

எனினும், வீறுகொண்டெழுந்த ஓல்ட் கோல்ட்ஸ் அணி, அடுத்தடுத்து 2 கோல்களை போட்டு ஆட்டத்தை சமப்படுத்தியது. ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் பெற்றிருந்தமையால், வெற்றியாளரை தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் ஓல்ட் கோல்ட்ஸ் அணி 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

Related posts: