முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மரடோனா கோரிக்கை!

Wednesday, June 29th, 2016

கோபா  அமெரிக்க கோப்பை இறுதிப் போட்டி யில் சிலியிடம் தோற்றதை தொடர்ந்து  சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்சி அறிவித்தார்.

இதனால்  அவர்  அர்ஜென்டினா  அணிக்காக இனி விளையாட மாட்டார். பார்சிலோனா  கிளப் அணியில் மட்டுமே விளை யாடுவார்.29 வயதான  அவரால் அர்ஜென்டினா அணிக்கு எந்த கோப்பையும் பெற்று தர முடியவில்லை என்ற ஆதங்கத்தில் மனம் நொந்து போன நிலையில ஓய்வை அறிவித்து விட்டார். சர்வதேச போட்டியில் 2005ஆம் ஆண்டு அறிமுகமான அவரால் டிசோ மரடோனாபோல் பெருமையை தேடி தர முடியவில்லை.

பார்சிலோனா அணிக்காக பல்வேறு கோப்பைகளை பெற்றுதந்து பெருமை சேர்த்த மெஸ்சியால் தனது நாட்டு அணிக்காக ஒரு கோப்பை கூட முத்தமிடாமல் போனது பரிதாபமே.
சர்வதேச போட்டிகளில் 55 கோல்கள்  அடித்த மெஸ்சியின்  இந்த ஓய்வு முடிவு  அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு  மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும். ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரபல வீரர் டிசோ மரடோனா வேண்டு கோள் விடுத்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- அர்ஜென்டினா அணியில் மெஸ்சி நீடிக்க வேண்டும். ஏனென்றால் அவர் இன்னும் மிகவும் திறமையுடன்தான் இருக்கிறார். 2018ஆம் ஆண்டு ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பையில் விளையாட வேண்டும். உலக கோப்பையை வென்று பெருமை சேர்க்க வேண்டும். மெஸ்சியை ஓய்வு பெறுமாறு யார் சொன்னது? அர்ஜென்டினா கால்பந்து அணி தற்போது மோசமான கட்டத்தில் இருக்கிறது. என்று கூறி உள்ளார்.

இதேபோல அந்நாட்டு அதிபரும் மெஸ்சி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை அவர் ஏற்பாரா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Related posts: