அமெரிக்காவை ஊதித்தள்ளி இறுதிப்போட்டிக்கு நுழைந்த அர்ஜென்டினா!

Friday, June 24th, 2016

கோபா அமெரிக்கா கிண்ண கால்பந்து தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்திய அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

அமெரிக்காவில் 45வது கோபா அமெரிக்கா கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி. மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா – அமெரிக்கா அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அர்ஜென்டினா வீரர்களின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு அமெரிக்க அணி ஈடுகொடுத்து விளையாட முடியாமல் திணறியது.

ஆட்டத்தின் 3வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணிக்கு லவாசி முதல் கோலை போட்டார். 32வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். இது இந்த தொடரில் அவர் அடித்த 5வது கோல் ஆகும்.

இதனால் முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.இதைத் தொடர்ந்து நடந்த 2வது பகுதி ஆட்டத்தில் அந்த அணிக்கு கோன்சாலோ ஹிகுயின் மேலும் 2 கோல்களை அடித்தார். அவர் 50 மற்றும் 86வது நிமிடங்களில் இந்த கோல்களை அடித்தார்.

கடைசி வரை போராடிய அமெரிக்கா அணியால் ஒரு கோல் கூட போட இயலவில்லை. முடிவில் அர்ஜென்டினா 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இதன் மூலம் அர்ஜென்டினா அணி 28வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. படுதோல்வியடைந்த அமெரிக்க அணி 3வது இடத்துக்கான போட்டியில் விளையாடும்.

Untitled-4 copy

Untitled-3 copy

Related posts: