முக்கோண வெற்றிக்கிண்ணம் கே.சி.சி.சி. அணி வசமானது!

Friday, October 7th, 2016

முக்கோண வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ்.சென்றல் விளையாட்டுக்கழகம் 2ஆவது வருடமாக நடத்தும் 50பந்து பரிமாற்றங்களைக் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் கே.சி.சி.சி. அணி யாழ்.பல்கலைக்கழக அணியை 10 ஓட்டங்களால் வெற்றி பெற்று முக்கோண வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கே.சி.சி.சி. அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது 45ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது. ராகுலன் – 72, உத்தமன் – 57 இவ்விருவரின் 5ஆவது இலக்கு இணைப்பாட்டம் 137 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். இது இந்தச் சுற்றுப்போட்டியில் ஓர் சாதனையாக அமைந்துள்ளது. ஆதித்தன் – 14 ஓட்டங்களைப் பெற்றார். ஜனன்தன் -1, வைகுண்டன் -5, சுயன்தன் -2, குருகுலசூரியா -1, கோகதீசன் -1 இலக்கினைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்.பல்கலைக்கழக அணி 48.3 ஓவர் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. யோகேஸ்வரன் – 49, தரகா -79 இவ்விருவரின் 2ஆவது விக்கெட் இணைப்பாட்டம் 131 ஓட்டங்களைப் பெற்றது. இதுவும் இந்த சுற்றுப்போட்டியில் ஓர் சாதனையாக அமைந்துள்ளது. சிறிகுமரன் 43 ஓட்டங்களையும் பெற்றனர். ராகுலன் -3, தனலக்சன் -1, சாமீபவன் -2, சிலோஜன் – 1, உத்தமன் -1 இலக்கினையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் சிறந்த வீரராக கே.சி.சி.சி அணியைச் சோந்த ராகுலன் தெரிவு செய்யப்பட்டார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற கே.சி.சி.சி அணிக்கு முக்கோண வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது. இப்போட்டிக்கு யாழ்.மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் கடந்தகால பொருளாளர் ர.வீரசிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இப்போட்டியின் மூலம் 2016 ஆண்டிற்கான தரவரிசை பட்டியலுக்கு கே.சி.சி.சி அணி 3.34 புள்ளிகளையும் யாழ்.பல்கலைக்கழக அணி 3.23 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது. இப்போட்டிக்கு குமரேசன், குகராஜா ஆகியோர் மத்தியஸ்தர்களாக கடமையாற்றினார்.

Ministry-of-education copy

Related posts: