மீள் எழுச்சி பெறவுள்ள ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக்!

Friday, December 15th, 2017

கடந்த ஆண்டுகளில் திட்டமிடப்பட்டாலும் செயற்படுத்த முடியாமல், வெற்றிபெறாத லீக் தொடர் என்றால் ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் மட்டுமே1!

உலகின் முன்ணணி, தொடர்களான IPL, BPL, CPL, PSL, BBL போன்ற தொடர்கள் அதிகமாக வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாது. தொடர்ச்சியாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மேலும் சில நாடுகள் லீக் தொடர்களை ஆரம்பிக்க முனைப்பு காட்டி வருகின்றன.

இந்தனடிப்படையில் கடந்த காலங்களில் கைவிடப்பட்ட SLPL தொடரை முன்னெடுக்கும் முனைப்புக்களை இலங்கை கிரிக்கட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு இந்த லீக் தொடரை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாத பட்சத்தில் 2019ம் ஆண்டளவில் ரீ20 லீக் தொடரை நடாத்தும் நகர்வையும் ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை மேற்கொண்டுவருகின்றது.

சர்வதேச கிரிக்கட் சபையின் எதிர்கால அட்டவணையை கருத்தில் கொண்டு இலங்கையின் லீக் தொடர் திட்டமிடப்படும் எனவும், ஆக்கஸ்ட் செப்டெமர் பருவகாலத்தில் குறித்த தொடரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

ஸ்ரீலங்கா கிரிக்கட் வாரியத்தின் உத்தியோக பூர்வ தகவலின் பிரகாரம், கிரிக்கட் சபைக்கு பாதிப்பையும், நஸ்டத்தையும் ஏற்படுத்தாதுமான தொடரையே முன்னெடுக்க காத்துள்ளோம், இலங்கை கிரிக்கட் வீரர்களை ரீ20 போட்டிகளில் பிரகாசிக்க வைக்க வேண்டும், ஊக்கமளிக்க வேண்டும், இந்த தொடர் இதுவரை முற்றாக திட்டமிடப்படவில்லை, ஆயினும் மீள இதனை கட்டியெழுப்பவே திட்டமிட்டுள்ளோம், மேலும் கடந்த 2012லிருந்து லீக் தொடரை சிறப்பாக முன்னெடுக்க முடியவில்லை. கடந்த பருவகால லீக் தொடர் வதந்திகளால் மோசமான தோல்வியையே பரிசளித்தது.

   2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் T20 போட்டிகள் திட்டமிடப்பட்டிருப்பதால் வெளிநாட்டு கிரிக்கட் வல்லுனர்களின் ஆதரவையும், பங்குபெற்றலையும் ஈர்க்கும் செயற்பாட்டில் கிரிக்கட் சபை, சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. அந்த நேரத்தில், கரீபியன் பிரீமியர் லீக், இங்கிலாந்து அவுஸ்திரேலிய தொடர்கள் தொட்டமிடப்பட்டுள்ளன. இவற்றைக்கருத்ய்ஹில் கொண்டு எதிர்கால லீக் தொடரை திட்டமிட்டுவருகின்றோம் என ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை குறிப்பிட்டிருந்தது.

Related posts: