பெண்கள் டி20 உலக கிண்ணம் – மேற்கிந்திய தீவு அணி வெற்றி!

Monday, February 24th, 2020

பெண்களுக்கான டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

நடைபெற்ற ஒரு போட்டியில் தாய்லாந்து – மேற்கிந்திய தீவு அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 78 ஓட்டங்களே பெற்றது. விக்கெட் காப்பாளர் கோன்சாரோயென்கை அதிக பட்சமாக 33 ஓட்டங்கள் பெற்றார்.

அதன்பின் 79 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்திய தீவு வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 127 ஓட்டங்கள் பெற்றது.

பின்னர் 128 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் தலைவி சோபி டெவைன் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்கள் பெற்றார்.

Related posts: