மீண்டும் விராட் கோஹ்லிக்கு  முதலிடம்!

Tuesday, October 31st, 2017

கடந்த 10 நாட்களாக தென்னாப்பிரிக்க அணியின் ஏபி டி வில்லியர்ஸ் முதல் இடத்தில் இருந்துவந்த நிலையில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்

நியுசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தமது 32வது ஒருநாள் சதத்தைப் பெற்று கோஹ்லி, மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.. இரண்டாம் இடத்தில் ஏபி டி வில்லியர்ஸ் உள்ளார்

மூன்றாம் இடத்தில் டேவிட் வோர்னரும், நான்காம் இடத்தில் பாபர் அசாமும் உள்ளனர்.ஐந்தாம் இடத்தில் குயின்டன் டி குக் உள்ளார்.ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தல் வரிசையில் முதல் 10 இடங்களில் இலங்கையைச் சேர்ந்தயாரும் இல்லை.

அதேநேரம், பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில், பாகிஸ்தானின் ஹசன் அலி முதல் இடத்தில் இருக்கிறார்.இரண்டாம் இடத்தில் இம்ரான் தாஹிரும், மூன்றாம் இடத்தில் ஜஸ்ப்ரிட் பும்ராவும், நான்காம் இடத்தில் ஜோஸ் ஹசல்வுட்டும் உள்ளனர். 5ம் இடத்தில் ககிசோ ரபடாவும் உள்ளார்.இதேவேளை சகல துறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலாம் இடத்தில் பாகிஸ்தானின் மொஹமட் ஹஃபீஸ் உள்ளார்.

இரண்டாம் மூன்றாம் இடங்களில், சகில் அல் ஹசன் மற்றும் மொஹமட் நாபி ஆகியோர் உள்ளனர்.நான்காம் இடத்தில் பென் ஸ்டாக்ஸும், ஐந்தாம் இடத்தில் இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தீவ்ஸும் உள்ளனர்.

Related posts: