பந்துவீச்சில் ரங்கன ஹேரத் எனக்கு அதிகமான உதவிகளை வழங்கிவருகின்றார் – லசித் எம்புல்தெனிய!

Thursday, August 22nd, 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனிய, காயத்துக்கு பின்னர் டெஸ்ட் அணிக்கு திரும்பியதுடன், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்

முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட இவர், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.நேர்காணல் ஒன்றில் பேசிய லசித் எம்புல்தெனிய கூறியதாவது, ரங்கன ஹேரத் பந்துவீச்சில் எனக்கு அதிகமான உதவிகளை வழங்கி வருகின்றார்.

எனது பந்துவீச்சில் ஏதாவது சந்தேகம் இருந்தால் நான் உடனடியாக அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்வேன். எந்த நேரத்திலும் அவரிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.உபாதைக்கு பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடியதால், முதல் இன்னிங்ஸில் சற்று தடுமாற்றம் அடைந்தேன்.

எனினும், இரண்டாவது இன்னிங்ஸில் அதனை திருத்திக்கொண்டு பந்துவீசினேன். அதனால் விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடியதாக இருந்தது.அனுபவ வீரர்களான மேத்யூஸ் மற்றும் திமுத் ஆகியோர் எனக்கு அழுத்தத்தை வழங்கவில்லை. அவர்கள் நான் சுதந்திரமாக பந்துவீசுவதற்கான இடத்தை வழங்கினர்.

அவர்கள் எப்போதும், தடுமாற்றமடையாமல் ஒரே மாதிரியான பந்துகளை வீசுமாறு கூறினர். அவர்கள் எனக்கு எந்த வித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts: