மீண்டும் சிறிலங்கா பிரிமியர் லீக்!

Wednesday, April 3rd, 2019

சிறிலங்கா பிரிமியர் லீக் 20க்கு 20 தொடரை மீண்டும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா கிரிக்கட் மேற்கொண்டு வருகிறது.

இந்த வருடத்தின் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாத காலப்பகுதியில் குறித்த தொடரை நடத்த எதிர்பார்த்துள்ளதாக, ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த தொடரானது இலங்கை கிரிக்கட் அணிக்கான சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கு பெரும் உதவியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடருக்காக 5 அல்லது 6 அணிகளை தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா கிரிக்கட் மேற்கொள்ளும் எனவும் மொஹன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts: