மீண்டும் இலங்கை மகளிர் தோல்வி!

Wednesday, September 21st, 2016

இலங்கை, அவுஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவி மெக் லன்னிங், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் முடிவில், எட்டு விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், அவுஸ்திரேலிய அணி சார்பாக, நிக்கோல் போல்டன் 64(88), அலெக்ஸ் பிளக்வெல் ஆட்டமிழக்காமல் 56(64), எலைஸ் விலானி 45(56) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இலங்கையணி சார்பாக அணித்தலைவி சாமரி அத்தப்பத்து மூன்று, சுகந்திகா குமாரி இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு, 255 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 78 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், இலங்கையணி சார்பாக சாமரி பொல்கம்பொல மட்டும்  ஆட்டமிழக்காமல் 68(136) ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணி சார்பாக, கிறிஸ்டன் பீம்ஸ் நான்கு, எலைஸி பெரி, ஹொலி பெர்லிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இரண்டு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, வெள்ளிக்கிழமை (23), கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

1432448668-9017

Related posts: