மீண்டும் இலங்கை அணியில் இடம்பெற காத்திருக்கும் குசல் !
Friday, May 13th, 2016
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.
வெகுவிரைவில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அவர்கடந்த வருடம் நவம்பர் மாதம் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு ஊக்கமருந்துக்கு எதிரான சர்வதேச நிறுவனம் நடத்திய பரிசோதனையிலும் இந்தக் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டிருந்தது.
ஆறு மாதங்கள் கடந்த நிலையில், குசல் ஜனித்துக்கு எதிரான விசாரணைகளைக் கைவிடத் தீர்மானித்ததாக சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று அறிவித்தது.இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
சிம்பாபே போட்டியில் பங்கேற்றால் தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரில் விளையாடுவது பாதிக்கப்படும் – மேத்ய...
உலகக் கிண்ண போட்டிகளில் பாகிஸ்தான் அல்லது இந்தியா பங்கேற்கத் தடை!
|
|
|


