மீண்டும் அணியில் ப்ராவோ !
Wednesday, January 16th, 2019
மேற்கிந்திய தீவுகள் அணியில், சகலதுறை ஆட்டக்காரர் டேரன் ப்ராவோ 2 வருடங்களின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றிலேயே, டேரன் ப்ராவோ இறுதியாக விளையாடியிருந்தார்.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற எந்த ஒரு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடாத நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு, அவரின் பெயர் டெஸ்ட் அணி பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
டோனிக்கு கிடைத்த மற்றுமொரு அரிய கெளரவம்!
ஜயசூரிய இராஜினாமா?
வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி முடிவுகள்
|
|
|


