மாவட்ட கரப்பந்தாட்டத் தொடர் மெதடிஸ் பெண்கள் அணி சம்பியன்!
Thursday, June 14th, 2018
யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் 19 வயது பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் அணி மாவட்டச் சம்பியனானது.
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் பலப் பரீட்சை நடத்தின.
மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தின் முதலிரு செற்களையும் முறையே 25:18 25:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:0 என்ற செற் கணக்கில் நேர்செற் வெற்றிபெற்றது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி.
Related posts:
இறுதி இலக்குகளை தகர்க்க தடுமாறிய இலங்கை!
சொந்த ஊரில் தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடும் திக்வெல்ல!
IPL 2018 : ஏலத்தில் 39 இலங்கை வீரர்கள்!
|
|
|


