மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகதமையாளர் மொரின்யோ திட்டம்!
Friday, July 21st, 2017
மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக, 15 ஆண்டுகளுக்கு இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள ஜொஸே மொரின்யோ, இதற்கு முன்னர் சேர் அலெக்ஸ் பேர்குசனின் காலத்தில் காணப்பட்ட உறுதியை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பேர்குசனின் காலத்தின் பின்னர், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளர் பதவிகள், அடிக்கடி மாற்றமடைந்து வருகின்றன. இந்நிலையிலேயே, தனது 2ஆவது பருவகாலத்திலேயே, நீண்டகாலத் திட்டத்தை, மொரின்யோ வெளிப்படுத்தியுள்ளார்.
முகாமையாளர்களின் பணிகள் தொடர்பாகக் காணப்படும் அழுத்தம் காரணமாக, 15 ஆண்டுகளுக்கு இருப்பது கடினமென்பதை ஏற்றுக் கொண்ட மொரின்யோ, எனினும், அணி வெற்றிபெறும் போது, அது சாத்தியமாகுமெனவும் தெரிவித்தார்.
Related posts:
இந்திய அணி இலங்கையை வந்தடைந்தது.
விராட் கோலியை தடுக்கவே இலங்கை வீரர்கள் நாடகமாடினர் - செவாக் !
T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் முதல் ஆட்டம் இன்று!
|
|
|


