கிளிநொச்சி மத்திய ம. வி. துடுப்பாட்டத்தில் சம்பியன்!

Wednesday, March 21st, 2018

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்திய 15 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டத் தொடரில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி 9 இலக்குகளால் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணியை எதிர்த்து கிளிநொச்சி மகா வித்தியாலய அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 26.1 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் அபிராஜ், பிரதாப் இருவரும் தலா 4 இலக்குகளையும் காண்டீபன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி 6 பந்துப் பரிமாற்றங்களில் ஓர் இலக்கை இழந்து வெற்றி பெற்றது. அருள்வெட்சி 43 ஓட்டங்களைச் சேர்த்தார்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் அருள்வெட்சி சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் தொடராட்ட நாயகனாகவும் அதே கல்லூரியின் அபினாஸ் ஆட்டநாயகனாகவும் சயந்தன் சிறந்த களத்தடுப்பாளராகவும் பிரதாப் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவாகினர்.

பரிசளிப்பு நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் காப்பாளரும் கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளருமான தி.ஜோன்குயின்ரஸ், மதிப்புறு விருந்தினர்களாக பிரித்தானிய தமிழ் துடுப்பாட்ட லீக்கின் காப்பாளர் வைத்திய கலாநிதி தெய்வேந்திரம், கிளிநொச்சி கல்வி வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் மு.காந்தச்செல்வன் வடக்கு மாகாண துடுப்பாட்டப் பயிற்றுனர் அமில பின்னத்துவ ஆகியோர் கலந்து கொண்டனர்

Related posts: