மகுடம் சூடியது அராலி சரஸ்வதி வித்தி!

வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத் தொடரில் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அராலி சரஸ்வதி மகாவித்தியாலய அணி சம்பியனானது.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் அராலி சரஸ்வதி மகாவித்தியாலய அணியை எதிர்த்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அராலி சரஸ்வதி மகாவித்தியாலய அணி 11:7 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியாட்டத்திலும் அராலி சரஸ்வதி மகாவித்தியாலய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. அந்த அணி முடிவில் 24:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனானது. மூன்றாமிடத்தை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி பெற்றது.
Related posts:
கிரிக்கெட் வீரர் சாரதி ரமித் ரம்புக்வெல்லவின் அனுமதி பத்திரம் இரத்து!
I.P.L. தொடர்: இறுதிக்கு சென்றது சென்னை!
விம்பிள்டன் 2021 ; 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!
|
|