பொல்லார்டு அசத்தல்: கடைசி பந்தில் மும்பை அணி திரில் வெற்றி!

Friday, April 12th, 2019

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் கேப்டன் பொல்லார்டு காட்டிய அதிரடி காரணமாக மும்பை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் 24 ஆவது லீக் ஆட்டமானது மும்பை-பஞ்சாப் அணிகளுக்கு இடையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சிறப்பான துவக்கம் கொடுத்தது. பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்கார்கள் கெய்ல்- ராகுல் இணைந்து 116 ரன்களை சேர்த்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அணியினர் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்திருந்தனர். அணி சார்பில் லோகேஷ் ராகுல் 100 ரன்களும், கெய்ல் 63 ரன்களும் குவிந்திருந்தனர்.

பஞ்சாப் அணி சார்பில் ஹார்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், ஜாஸ்ரிட் பம்ரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியின் சித்தீஷ் லேட் (15), டி காக் (24), சூர்யகுமார் யாதவ் (21) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, மும்பை அணியும் திணற ஆரம்பித்தது.

அந்த சமயத்தில் களமிறங்கிய அணியின் கேப்டன் பொல்லார்டு, அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து கடைசி ஓவரில் அவுட்டாகினார்.

பரபரப்பான சூழ்நிலையில் கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அல்ஸாரி ஜோசப் இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

Related posts: