பொலனறுவையில் தேசிய கிரிக்கெட் விளையாட்டு மைதானம்!
Monday, January 16th, 2017
பொலன்னறுவையில் சகல வசதிகளுடனும் கூடிய தேசிய கிரிக்கெட் விளையாட்டு மைதானமொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை ஹிங்குராங்கொட பிரதேசத்தில் மைதானம் அமைக்கப்படவுள்ளது. அரச பண்ணைக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதென இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டில் இந்த மைதானத்தை அமைத்து முடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்காக 60 மில்லியன் ரூபா செலவிடப்படும் என்றும் கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவித்தார்.

Related posts:
நேருக்கு நேர் மோதி விபத்து: கால்பந்து போட்டியில் பரிதபமாக உயிரிழந்த வீரர்!
மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி!
மீண்டும் இலங்கை அணியில் குசல் ஜனித் பெரேரா!
|
|
|


