லசித் மாலிங்கவை கைவிட்டது மும்பை இந்தியன்ஸ்..!

Tuesday, November 21st, 2017

மும்பை இந்தியன்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிவரும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை அடுத்த வருட ஏலத்திற்காக விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் அணி தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்காக கடந்த 2009 ஆம் அண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் லசித் மாலிங்க விளையாடி வந்தார். இந்நிலையில் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள வீரர்களின் ஏலத்திற்காக அவரை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக லசித் மாலிங்க சிறந்த முறையில் தனது பந்து வீச்சில் திறமையை வெளிப்படுத்தாமை காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

எனினும் இந்தியன் பிரிமியல் லீக் தொடரில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரராக லசித் மாலிங்கவே திகழ்கிறார். அவர் 110 போட்டிகளில் பங்கேற்று, 154 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். அவரை ஏலத்தில் விடுவிக்க தீர்மானித்துள்ள நிலையில், ஏனைய அணிகளுக்கு அவரை ஏலத்தில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: