புள்ளிப்பட்டியலில் பின்தள்ளப்பட்டது சென்னை ! 

Friday, May 4th, 2018

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக அதன் தலைவர் மகேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பின்தள்ளப்பட்டுள்ளது.

அதன்படி , முதலிடத்தில் இருந்த  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இரண்டாது இடத்தில் இருந்த ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.குறித்த இரு அணிகளும் தலா 12 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: