2வது போட்டியில் 196 ஓட்டங்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்!

Sunday, July 31st, 2016

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ஓட்டங்களில் சுருண்டது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடைபெற்றுவருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கம்மின்ஸ் அறிமுக வீரராக களமிறங்கினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத் வெயிட் (1), சந்திரிகா (5) டேரன் பிராவோ(0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிளாக்வுட் (62) அரைசதம் அடித்து வெளியேறினார்.

பின்கள வரிசை வீரர்களால் அஷ்வின் சுழலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில், 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 5 விக்கெட் கைப்பற்றினார். இஷாந்த், ஷமி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து விளையாடிவரும் இந்தியா 12 ஓவர்களில் 51 ஓட்டங்களெடுத்துள்ளது.

Related posts: