புரோ பட்மிண்டன் லீக் – ஆமதாபாத் வெற்றி!

புரோ பட்மிண்டன் லீக் போட்டியில் தில்லி டேஷர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஆமதாபாத் தரப்பில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிக்கி ரெட்டி இணை களம் கண்டது.
தில்லி தரப்பில் மனீபோங் ஜோங்ஜித்-சியா சின் லீ ஜோடி விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் ஆமதாபாத் ஜோடி 15-11, 15-10 என்ற செட்களில் வென்றது.
அடுத்து நடைபெற்ற ஆடவர் பிரிவில், ஆமதாபாத் வீரர் டேரன் லியு 15-12, 15-13 என்ற செட்களில் தில்லி வீரர் ஹெச்.எஸ். பிரணாயை வீழ்த்தினார்.
மற்றொரு ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் தில்லி வீரர் டாமி சுகியார்டோ 15-12, 10-15, 15-8 என்ற செட்களில் ஆமதாபாத் வீரர் விக்டர் அக்னஸல்சனை வென்றார்.
முதல் 3 ஆட்டங்களின் முடிவில் ஆமதாபாத் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, தொடர்ந்து மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன.
Related posts:
|
|