பி.சி.சி.ஐ தலைவர் பதவி விலகல்!
Thursday, May 12th, 2016
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ) தலைவர் ஷஷாங் மனோகர், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளர் பதவிக்குப் போட்டியிடும் நோக்கிலேயே, தனது பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு, எந்த கிரிக்கெட் சபையையும் சேர்ந்திராத, சுயாதீனப் போட்டியாளர்களே போட்டியிட முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, தனது பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவது மாத்திரமன்றி, சர்வதேச கிரிக்கெட் சபையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதிநிதி என்ற பதவியையும் ஆசிய கிரிக்கெட் சபையிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் சபையின் செயலாளர் அனுரக் தாகூருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலமே, இந்தப் பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார்
Related posts:
|
|
|


