பிரேஸிலுக்கு சாதனையுடன் தங்கம்!

Wednesday, August 17th, 2016

நடைபெற்றுவரும் றியோ ஒலிம்பிக் போட்டிகளின் கோலூன்றிப் பாய்தலில்  ஒலிம்பிக் சாதனையாக 6.03 மீற்றர் உயரம் பாய்ந்து, அதிர்ச்சிகரமாக பிரேஸிலின் தியாகோ பிறாஸ் டா சில்வா தங்கம் வென்றார்.

2012ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்கோலூன்றிப் பாய்தலில் தங்கம் வென்ற பிரான்ஸின் வெனு லவீனி 5.98 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, 6.03 மீற்றர் உயரத்தை முதலாவது தடவை டா சில்வா பாயாத போதும், இரண்டாவது தடவை பாய்ந்து தங்கம் வென்றார்.

லவீனி வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், 5.85 மீற்றர் தூரம் பாய்ந்த  ஐக்கிய அமெரிக்காவின் ஸாம் கென்ட்றிக்ஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

டா சில்வா வென்ற தங்கமே, போட்டிகளை நடாத்தும் நாடான பிரேஸிலுக்கு தடகளப் போட்டிகளில் முதலாவது தங்கம் என்பதுடன், மொத்தமாக இரண்டாவது தங்கமாகும்.

Related posts: