பிஃபா தரவரிசை: ஜேர்மனியை பின்தள்ளி பிரேசில் !

சர்வதேச கால்பந்து சபை (பிஃபா) வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலின்படி, ஜேர்மனியை பின்தள்ளி நெய்மரின் பிரேசில் அணி முன்னிலை பெற்றுள்ளது.
சர்வதேச கால்பந்து சபையின் புதிய தரவரிசைப் பட்டியல் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது.
அதில், நெய்மரின் பிரேசில் அணி முதலிடத்தை பிடித்துள்ள அதேவேளை, 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற ஜேர்மன் அணி இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
லயனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணி தொடர்ந்தும் மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் போலந்து அணிகள் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களுக்கு முன்னேறியுள்ளது.
அதேவேளை, கிரிஸ்டியானோ றொனால்டோவின் போர்த்துக்கல் அணி நான்காம் இடத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
Related posts:
ரியோ ஒலிம்பிக் 2016 இன் பிரம்மாண்ட வைபவத்தின் புகைப்படத் தொகுப்பு!
வோகனின் கருத்தால் ஜோ ரூட் வருத்தம்!
வங்கதேச பயிற்சியாளர் நீக்கம்!
|
|