பாட்மிண்டன் –  கரோலினா சாம்பியன் !

Monday, August 6th, 2018

உலக பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் கரோலினா மரின்.

சீனாவின் நான்ஜிங் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிந்து-கரோலினா மரின் இடையிலான மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒலிம்பிக் சாம்பியன் ஆன கரோலினா மரின் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.

முதல் கேமில் சிந்து கடும் சவாலை ஏற்படுத்திய நிலையில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில் முதல் கேமை 21-19 என மரின் வென்றார். எனினும் இரண்டாவது கேமில் மரினின் ஆட்டத்துக்கு சிந்துவிடம் பதில் இல்லை. 21-10 என்ற புல்ளிக்கணக்கில் மரின் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

2014, 2015, 2018 என தற்போது மூன்றாவது முறையாக மரின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக பாட்மிண்டன் போட்டியில் 2013, 2014-இல் வெண்கலம், 2017-இல் வெள்ளி வென்ற சிந்து தற்போது மீண்டும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

ஆடவர்: மொமட்டோ சாம்பியன்

2016 ரியோ ஒலிம்பிக் போட்டி இறுதிச் சுற்றிலும் சிந்துவை வீழ்த்தினார் மரின் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் கெண்டோ மொமட்டோ 21-11, 21-13 என்ற நேர் செட்களில் சீனாவின் இளம் வீரர் ஷி யுகியை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வெல்லும் ஜப்பான் வீரர் மொமட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: