பாசிலோனாவிற்காக 100 கோல்கள் அடித்த நெய்மர் சாதனை!

Thursday, April 6th, 2017

பிரேசில் கால்பந்து அணியின் தலைவரான நெய்மர் பாசிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கழக அணிகளுக்கு இடையில் நடைபெறும் மிகப்பெரிய தொடர் லா லிகா கால்பந்து தொடர். இதில் பாசிலோனா, ரியல் மட்ரிட் ஆகியவை தலைசிறந்த அணிகள். பாசிலோனா அணியில் மெஸ்சி, சுவாரஸ், நெய்மர் ஆகிய மூன்று தலைசிறந்த வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

பிரேசில் அணியின் சிறந்த வீரராக வலம் வந்த நெய்மரை 2013-ம் ஆண்டு பாசிலோனா சாண்டோஸ் கழகத்திடம் இருந்து வாங்கியது. அந்த ஆண்டு சூப்பர்கோபா தொடரில் அட்லெடிகோ மட்ரிட் அணிக்கெதிராக தனது முதல் கோலை பதிவு செய்தார்.

லா லிகா தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிரேனடாவிற்கு எதிரான போட்டியில் பாசிலோனா 4-1 என வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாசிலோனாவிற்கான நான்காவது கோலை நெய்மர் அடித்தார். இதன் மூலம் பாசிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்தார். அந்த அணிக்காக நெய்மர் 177 முறை களமிறங்கி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். மெஸ்சி 188 போட்டிகளில்தான் 100-வது கோலை தொட்டார்.

லா லிகா தொடரில் 64 கோல்களும், சம்பியன்ஸ் லீக் தொடரில் 21 கோல்களும், கோபா டெல் ரெய் தொடரில் 14 கோல்களும், ஸ்பெயின் சூப்பர்கோபா தொடரில் ஒரு கோலும் அடித்துள்ளார். பாசிலோனா அணியுடன் 2021-ம் ஆண்டு வரை விளையாட நெய்மர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பி்டத்தக்கது.

Related posts: