பாகிஸ்தானில் நடைபெறவிருந்த கிரிக்கட் தொடர் இலங்கையில்?

பாகிஸ்தானில் ஏப்ரல் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஆசிய வளர்ந்துவரும் அணிகளுக்கான கிரிக்கட் தொடரினை இலங்கைக்கு மாற்றும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தமது அணியை அனுப்ப இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தயக்கம் காட்டுகிறது. இதனால் இந்த தொடர் இலங்கையில் அல்லதுபங்களாதேஸில் நடத்துவது குறித்து சிந்திக்கப்படுகிறது.
ஆனால் இதுதொடர்பில் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் ஆசிய கிரிக்கட் சபையின் கூட்டம் ஒன்றை கொழும்பில் நடத்த ஒழுங்கு செய்திருப்பதாக, பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் நஜாம் செதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்தப்படவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கு பாகிஸ்தான் அணி அங்கு செல்வதும் நிச்சயமில்லை என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|