IPL போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை!

Saturday, March 23rd, 2019

உலக நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று(23) ஆரம்பமாகிறது.

இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(23) ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முதல்நாள் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் எங்கள் அணி வீரர்கள் விளையாடிய போட்டிகளை ஒளிபரப்ப இந்தியாவை சேர்ந்த பிரபல ஒளிபரப்பு நிறுவனம் மறுத்து விட்டது.

இதனால் ஐ.பி.எல். போட்டிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பவாத் அஹமத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஜெய்ஷ் இ முகமது பங்கரவாத இயக்கத்தின் ஆதரவுபெற்ற பயங்கரவாதியால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால், பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் இந்திய உரிமத்தை பெற்றிருந்த தொலைக்காட்சி அந்த தொடரின் ஒளிபரப்பை தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: