பளுதூக்கல்: தங்கத்தை வென்றார் ஆசிகா!
Friday, May 25th, 2018
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான நடைபெற்ற பளுதூக்கலில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி வி.ஆசிகா தனது சாதனையை சமப்படுத்தியதுடன் தங்கம் வென்றார்.
அண்மையில் இந்தப் போட்டிகள் குருநகர் சென். ஜேம்ஸ் வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றன.
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 63 கிலோ எடைப் பிரிவில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி வி.ஆசிகா 170 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் வடமாகாண சிறந்த பளுதூக்கும் வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
IPL கிண்ணத்தை வென்றது ஐதராபாத்!
400m தடை தாண்டலில் கெரோன் கிளெமென்டுக்குத் தங்கம்!
ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!
|
|
|


