பயிற்சியாளர் கார்லஸ் மோயாவை பிரிகிறார் மிலோஸ் ராவ்னிக்!
Saturday, December 3rd, 2016
கனடாவின் முன்னணி டென்னிஸ் வீரர் மிலோஸ் ராவ்னிக் பயிற்சியாளர் மோயாவை விட்டு ராவ்னிக் நேற்றுமுன்தினம் பிரிந்துள்ளார்.
கனடாவின் முன்னணி டென்னிஸ் வீரர் மிலோஸ் ராவ்னிக், உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கிறார். இந்த ஆண்டில் மொத்தம் 52 ஆட்டங்களில் வெற்றி கண்ட அவர் பிரிஸ்பேன் போட்டியில் பட்டமும் வென்றார்.
விம்பிள்டனில் முதல்முறையாக இறுதிப்போட்டி வரை வந்தார். முன்னாள் வீரர் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லஸ் மோயா கடந்த ஜனவரி மாதம் முதல் அவருடன் கைகோர்த்து பயிற்சி அளித்து வந்தார். இந்த நிலையில் பயிற்சியாளர் மோயாவை விட்டு ராவ்னிக் நேற்று பிரிந்தார்.
இது தொடர்பாக 25 வயதான ராவ்னிக் கூறும் போது, ‘இந்த ஆண்டில் பல வெற்றிகளை குவிக்க உதவிகரமாக இருந்த மோயாவுக்கு நன்றி. அவரது வழிகாட்டுதலின் கீழ் இந்த நாள் வரைக்கும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனால் அவருடனான பயிற்சியாளர் உறவை இனி தொடர முடியாது. இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருப்போம்’ என்றார்.

Related posts:
|
|
|


