277 நாட்களில் முதல் வெற்றி: ஆப்கானிஸ்தான் அணி சாதனை!

Tuesday, March 19th, 2019

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், டெஸ்ட் உலகில் நுழைந்து ஓர் ஆண்டுக்குள்ளாகவே வெற்றியைப் பெற்று ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டேராடூனில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி அயர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்கள், ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜார்ஜ் டக்ரெல் 39 அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அயர்லாந்து அணி 172 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 314 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரஹ்மத் ஷா 98 ஓட்டங்கள் குவித்தார். அதன் பின் 2வது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி 288 எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க வீரர் ஷஷாத் 2 ஓட்டங்களில் அவுட் ஆக, பின்னர் வந்த ரஹ்மத் ஷா மற்றொரு தொடக்க வீரர் இஷனுல்லா ஜனத்துடன் இணைந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். ரஹ்மத் ஷா 122 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இஷனுல்லா 65 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் உலகில் நுழைந்து 277 நாட்களே ஆன நிலையில் முதல் வெற்றியை ஈட்டி ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைத்துள்ளது.

மேலும், போட்டிகள் கணக்கில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக முதல் டெஸ்ட் வெற்றியை விரைவில் பெற்று ஆப்கான் அணி 2வது இடத்தில் உள்ளது. ஆப்கான் அணி ஏற்கனவே தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக ஆடியது.

இந்த சாதனை வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் அஸ்கர் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான், எங்கள் அணி மக்கள் ஆகியோருக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். உலகக்கோப்பை தயாரிப்பிற்காக தென் ஆப்பிரிக்கா செல்கிறோம். நல்ல கிரிக்கெட் ஆட எங்களால் முடிந்த அளவு சிறப்பாக ஆடுவோம்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: