பந்து வீசுவதற்கான ஆலோசகராக சமிந்த வாஸ்!

இலங்கை அணியின் பந்து வீசுவதற்கான ஆலோசகராக சமிந்த வாஸ் பெயரிடப்பட்டிருந்தமை கடந்த காலங்களில் பெரும் பேசுபொருளாக அமைந்திருந்தது.
அதன்பிற்பாடு, மேற்குறித்த ஆலோசகர் பதவிக்கு சமிந்த வாஸ் தேர்ச்சி பெற்றிருக்கின்றமை இன்னும் போதாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கருத்துத் தெரிவித்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
அவ்வாறிருக்க, சமிந்த வாஸ் இனை இலங்கை ‘A’ அணிக்கு பந்து வீசுவதற்கான ஆலோசக பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானம் எடுத்துள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
அது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ‘A’அணிக்காக இலங்கையின் சுற்றுப்பயணத்தினை முன்வைத்தேயாகும்.குறித்த ‘A’ அணியின் பயிற்சியாளராக தற்போது அவிஷ்க குணவர்தன இன்னும் பதவியில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரங்கண ஹேரத் ஓய்வு?
ஜனரஞ்சக வீரர் விருதிற்கு அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை!
வெற்றி இலக்கை அடைய தடுமாறும் இலங்கை அணி!
|
|