வெற்றி இலக்கை அடைய தடுமாறும் இலங்கை அணி!

Tuesday, June 26th, 2018

இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில் 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவு வரையில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்களைப் பெற்றதுடன் இரண்டாவது இன்னிங்சில் 93 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக 154 ஓட்டங்களைப் பெற்றது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் மொத்தமாக 20 விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இதற்கிடையில் இந்த போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா காயமடைந்தார்.

தில்ரூவான் வீசிய பந்தை ஆறு ஓட்டங்களுக்கு செல்லவிடாமல் தடுக்க முற்பட்ட வேளையில் விளம்பர பதாகையில் வீழ்ந்த குசல் பெரேராவைஇ காவு வண்டியின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் அவருக்கு பல்வேறு ஸ்கேன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் அவரின் நிலமை பாரதூரமானதாக இல்லை என்றும்இ நாளை போட்டியில் அவர் துடுப்பெடுத்தாடுவாரா இல்லையா என்பது குறித்து நாளை காலையே தீர்மானிக்கப்படும் என்றும் இலங்கை அணியின் முகாமையாளர் ஹசங்க குருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: