பந்துவீச்சாளர்களால் காப்பாற்றப்பட்ட விராட் !

Monday, January 30th, 2017

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய – இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தீர்மானித்தது. இந்திய தொடக்க வீரர் கேஎல் ராகுல் 71, கோஹ்லி 21, மணிஸ் பாண்டே 30 ஓட்டங்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறி தடுமாறியதால் இறுதியாக 20 ஓவர் முடிவில் 144 ஓட்டங்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது.

கடைசி 3 ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 145 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களான ராய் 10, பில்லிங் 12 ஓட்டங்களுக்கு நெக்ரா பந்தில் வெளியேறினர். ரூட் 38, மார்கன் 17, ஸ்டோக் 28, பட்லர் 15 ஓட்டங்கள் எடுத்தனர்.

20 ஓவர் முடிவில் மோயின் அலி 1 ஓட்டங்களுடனும், ஜோர்டன் ஓட்டம் எதுவும் எடுக்காத நிலையில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தலாக வெற்றி பெற்றது.

நெகரா, பும்ரா கடைசி 3 ஓவர்கள் அற்புதமாக பந்து வீசி இந்திய அணி வெற்றி பெற உதவினர்.நெகரா 4 ஓவருக்கு 28 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அதேபோல் பும்ரா 4 ஓவருக்கு 20 ஓட்டங்கல் மட்டும் விட்டு கொடுத்து 2விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பும்ரா வீசிய கடைசி இரண்டு ஓவர்கள் இங்கிலாந்தின் வெற்றி கனவை கனவாகவே மாற்றியது. இந்நிலையில் கோஹ்லியின் முதல் டி20 தொடர் தோல்வி அடையாமால் பும்ரா காப்பாற்ற வாய்ப்பளித்துள்ளார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: